திருக்குறள் உரைக்கு தலைப்பு அறிவித்த கவிஞர் வைரமுத்து

0
107

கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதுவதாக ஏற்கனவே அறிவித்து அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். பல மாதங்களாக திருக்குறளுக்கான உரையை எழுதி வந்தார். தற்போது திருக்குறளின் முப்பாலுக்கும் உரையை எழுதி முடித்துள்ள நிலையில அந்த நூலுக்குவள்ளுவர் மறை வைரமுத்து உரைஎன்ற தலைப்பையும் சூட்டி இருக்கிறார்.

இதுகுறித்து வைரமுத்து கூறும்போது, ‘’திருக்குறளுக்கு எழுதி உள்ள  இந்தப் புதிய உரை நவீனமானது; டிஜிட்டல் தலைமுறைக்கானது; கணினித் தலைமுறைக்கான தமிழில் எழுதப்பட்டது; எளிமையும் துல்லியமும் உடையது; பண்டிதரையும் பாமரரையும் ஒருசேரச் சென்றடைவது. அறத்துப்பாலும் பொருட்பாலும் ஞானத்தமிழில் இயங்குவது; இன்பத்துப்பால் கவிதைப் பொருளாய் விளங்குவது’’ என்றார்.

வள்ளுவர் மறை வைரமுத்து உரைஜூலை மாதம் நூலாக வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here