தமிழ் படங்களில் மலையாள நடிகைகள் பலர் அறிமுகமாகி திறமையான நடிப்பை வெளிப்படுத்தி முன்னணி கதாநாயகிகளாக கொடி கட்டிப் பறக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது கேரளாவில் இருந்து இன்னொரு அழகான நடிகையான சம்ரிதி தாரா மையல் என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பரனு பரனு பரனு செல்வன்’ என்ற மலையாள படம் வெளியானது. இதில் சம்ரிதி தாரா நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தன.
தமிழ் படத்தில் அறிமுகமானது குறித்து சம்ரிதி தாரா கூறும்போது, ‘’தமிழ் படங்களில நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது ‘மையல்‘ படம் மூலம் நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மையல் பட இயக்குநர் ஏ.பி.ஜி. ஏழுமலை கதையை சொன்னபோது என் கதாபாத்திரத்தின் ஆழம் புரிந்து கொண்டேன். தமிழ் சினிமாவில் இப்படியான கதாபாத்திரத்தில் அறிமுகமாவது அரிய வாய்ப்பு. அர்ப்பணிப்புள்ள தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்தது இன்ஸ்பையரியங்கான விஷயம்.
வலுவான காதல், படபடப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான பல விஷயங்களுடன் ‘மையல்‘ பார்வையாளர்களை ஈர்க்கும். மையல் படத்தை பார்வையாளர்களுடன் திரையரங்குகளில் படம் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.
என் குடும்பத்தில் இருந்து முதல் தலைமுறையாக நடிக்க வந்திருக்கிறேன். இந்த பாசிட்டிவ் நம்பிக்கையை எனக்குள் விதைத்த என் பெற்றோர், கிரிக்கெட்டரான என் சகோதரருக்கு நன்றி. ‘மையல்’ என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் படமாகவும் தமிழகத்தில் எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுக்கும் படமாகவும் இருக்கும்” என்றார்.
























