நடிகர் விஷால் சினிமாவில் நடிப்பதோடு இன்னொரு புறம் ஆதரவற்ற ஏழைகள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். விஷால் மக்கள் நல இயக்க நிர்வாகிகளும் மாவட்டம் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சி.எஸ்.ஐ பள்ளியில் நடந்தது. இதில் விஷால் மக்கள் இயக்க செயலாளர் வ.ஹரிகிருஷ்ணன், மாவட்ட தலைவர் தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினார்கள். ஆதரவற்ற மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மூட்டைகள், மளிகை பொருட்கள் போன்றவற்றை அவர்கள வழங்கினார்கள். நிகழ்ச்சியில் விஷால் மக்கள் நல இயக்க நிர்வாகிகள், விஷால் ரசிகர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈரோடு மாவட்டம் மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர் பூபதி – யாழினி திருமணம் நடந்தது. இதில் விஷால் சார்பில் விஷால் மக்கள் இயக்க செயலாளர் வ.ஹரிகிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களுக்கு பரிசு வழங்கினார். அப்போது விஷால் செல்போன் வீடியோ அழைப்பில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து இன்ப அதிர்ச்சி அளித்தார்.





















