என்னை வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களுக்காக  சேவை செய்வதே என் வாழ்நாள் கடமை—சோழிங்க நல்லூர் தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ  இ.சி.ஆர் சரவணன்

0
137

சோழிங்க நல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏவும் சென்னை புறநகர் த.வெ.க மாவட்ட செயலாளருமான நீலாங்கரை இ.சி.ஆர். பி. சரவணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

தமிழக சட்டமன்ற தேர்தலில்  விசில் சின்னத்துக்கு வாக்களித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான எங்கள் தளபதியை முதல்வர் அரியணையில் அமர வைத்த சோழிங்க நல்லூர் தொகுதி மக்களின் பாதம் பணிந்து கோடானு கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் தளபதி சொன்னதுபோல் இந்த தேர்தலில் த.வெ.கவுக்கு கிடைத்துள்ள வெற்றியானது மக்கள் தலைமையிலான ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும். 

 

பெரியவர்கள், தாய்மார்கள். அண்ணன், தம்பிகள், அக்காள், தங்கைகள், இளைஞர்கள், குழந்தைகள் என்று அத்தனைபேரும் விசில் சின்னத்துக்கு வாக்களித்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக சோழிங்க நல்லூர் தொகுதியில் த.வெ.க வேட்பாளராக போட்டியிட்ட என்னை தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தமைக்காக எனது வாழ்நாள் முழுவதும் தொகுதி மக்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்கிறேன்.         

 

என்னை வெற்றி பெறச் செய்த சோழிங்க நல்லூர் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து அவர்களுக்கு சேவை செய்வதை  எனது வாழ்நாள் கடமையாக கொண்டு இருப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். சோழிங்க நல்லூர் தொகுதியில் குறிப்பாக சாலை வசதிகள், குடிநீர் வசதிகள். கழிவுநீர் வசதிகள், மின் விளக்கு வசதிகள், உள்ளிட்ட  அனைத்து அடிப்படை வசதிகளையும் எந்த குறையும் இல்லாமல் செய்து தருவேன்.

 

 தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய புதிய திட்டங்கள் நிறைய உள்ளன. அவற்றை தமிழக முதல்வர் தளபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றிக் கொடுப்பேன். மக்களின் குறைகளை கேட்டு அறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்வேன். பொதுமக்கள் எந்த நேரமும் என்னைத் தொடர்பு கொண்டு குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காண்பேன். சோழிங்க நல்லூர் தொகுதியை சிறந்த முன்மாதிரி தொகுதியாக்க உழைப்பேன். தொகுதி மக்களுக்கு உண்மை ஊழியனாக இருந்து தொகுதியின் மேம்பாட்டுக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்வேன் என்று  உறுதி கூறுகிறேன்.

 

இவ்வாறு இ.சி.ஆர். சரவணன் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here