தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், திரைப்பட தயாரிப்பாளரும், சினிமா விநியோகஸ்தர்கள் சங்க தலைவருமான கே.ராஜன் சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரது நினைவேந்தல் மற்றும் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி சென்னை காமராஜர் மெட்ரிகுலேஷன்ப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தனர்களாக கலந்து கொண்டு கே.ராஜன் உருவப்படத்தை திறந்து வைத்தனர். மேலும் கே.ராஜன். உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். நலிந்தோருக்கு உதவி பொருட்களையும் வழங்கினர். நிகழ்ச்சியில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.





















