‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற அர்ச்சனா தற்போது சினிமாவிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.
இந்த நிலையில் ‘பிக்பாஸ்’ அர்ச்சனா அளித்துள்ள பேட்டியில், ‘’”பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. என்னுடைய அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.
என் அப்பா என்னை எப்போதும் ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார்
தற்போது எனது முழு கவனமும் நடிப்பில் இருக்கிறது. வழக்கமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வலுவான, பல அடுக்குகள் கொண்ட, எமோஷனலான புதிய பெண் கதாபாத்திரங்களைத் திரையில் கொண்டு வரவே விருப்பம்
கதை நன்றாக இருந்தால் சினிமா, ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள அதே சமயம் பார்வையாளர்களுடன் கனெக்ட் செய்யும்படியான கதாபாத்திரங்களில் நடிக்கவே விருப்பம்
சீனியர் நடிகைகள் ஷபானா அஸ்மி, ஸ்மிதா படில், அர்ச்சனா, ஷோபனா மற்றும் நந்திதா தாஸ் இவர்கள் எல்லாம் பிடிக்கும். கதாநாயகிகளாக அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். அதுபோல என் பணியிலும் நான் முத்திரை பதிக்க விரும்புகிறேன்
டீனேஜ் கதாநாயகிகளைப் போலவே கதையின் நாயகியாக எந்த வயதிலும் நடிக்கலாம் என்பதைப் பலரும் இப்போது நிரூபித்து வருகின்றனர். அதனால், என்னுடைய பெஸ்ட் கொடுப்பேன்
புதுமையான கதாபாத்திரம். அதற்கான அங்கீகாரம் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்கான விஷயங்கள் நிச்சயம் செய்வேன்” என்றார்.























