முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தேவர் சிலைக்கும் உருவப்படத்துக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
விஷால் மக்கள் இயக்கம் சார்பிலும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. சென்னை நந்தனம் அண்ணா சாலையில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு விஷால் மக்கள் இயக்க செயலாளர் வ.ஹரிகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் விஷால் மக்கள் நல இயக்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.





















