ராமசாமி படையாச்சியார் சிலைக்கு தமிழ் மகன் உசேன், வளர்மதி, பொன்னையன்,  டி.ஜெயக்குமார், நாஞ்சில் அன்பழகன் மாலை அணிவிப்பு

0
48

முன்னாள் அமைச்சரும் சுதந்திர போராட்ட வீரரும், பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்தவருமான ராமாசாமி படையாச்சியார் 109-வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

சென்னை கிண்டியில் உள்ள ராமசாமி படையாச்சியார் சிலைக்கு அ.தி.மு.க சார்பில் தலைமை கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். அ.தி.மு.கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, பொன்னையன். டி.ஜெயக்குமார்,  திரைப்பட இயக்குனரும் அ.தி.மு.கலைப் பிரிவு செயலாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை ரவி, ராயபுரம் மனோ உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து வணங்கினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here