யோகிபாபுவின் ‘ஸ்கூல்’ டிரெய்லரை பார்த்து பாராட்டிய நடிகர் உபேந்திரா

0
93

பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம்ஸ்கூல்’. இதில் நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். 

இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆர்.கே. வித்யாதரன் டைரக்டு செய்து குவாண்டம் பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். 

படம் பற்றி படக்குழுவினர் கூறும்போது, ‘’இது ஒரு உளவியல் ரீதியிலான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ, மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை, தற்கொலை, விபத்து, கலவரம், போன்ற முக்கிய கிரைம் சம்பவங்களை அலசி ஆராயும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது. 

கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படம் இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாகவும் இருக்கும். ‘ஸ்கூல்படம் கோடை கொண்டாட்டமாக மே 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது’’ என்றனர். 

இந்த படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை கன்னட நடிகர் உபேந்திராவிடம் இயக்குனர் ஆர்.கே.வித்யாதரன் காண்பித்தார். அதை பார்த்த உபேந்திரா மிகவும் நன்றாக இருப்பதாக பாராட்டியதோடு படம் வெற்றிபெற வாழ்த்தும் தெரிவித்தார்.  

ஆர்.கே.வித்யாதரன் ஏற்கனவே கன்னடத்தில் உபேந்திரா, ரேணுகா மேனன், ரீமா சென் ஆகியோர் நடித்துள்ளநியூஸ்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவு: ஆதித்யா கோவிந்தராஜ், எடிட்டிங்: ராகவ் அர்ஸ், இணை தயாரிப்பு: கே.மஞ்சு. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here