அனைத்து பணியிலும் ஒருவரே— இயக்குனர் சங்ககிரி ராஜ்குமாரின் ‘ஒன் மேன்’ திரைப்பட சாதனை

0
84

வெங்காயம்’, ‘பையாஸ்கோப்ஆகிய படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் தற்போதுஒன் மேன்என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். அத்துடன் படத்தின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, இசை, வசனம், மேக்கப், காஸ்ட்யூம் என ஒரு படத்துக்கு தேவையான அனைத்துப் பணிகளையும்  யாருடைய உதவியும் இன்றி இவர் ஒருவரே செய்து இருக்கிறார். இப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களிலும் இவரே நடித்தும் இருக்கிறார். இது உலக சினிமாவில் இதுவரை செய்யப்படாத சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. ‘ஒன் மேன்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

 

படம் குறித்து சங்ககிரி ராஜ்குமார் கூறும்போது,’’ எளிய மக்களின் வாழ்வியலை அவர்கள் வாழ்வு மேம்பட நாம் சொல்ல வேண்டிய செய்திகளை சினிமாவில் சொல்ல வேண்டும் என்றுவெங்காயம்’ ‘பையாஸ்கோப்படங்களை எடுத்திருந்தேன். இந்நிலையில் பெரிய பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படங்கள் வியாபார நோக்கமே முதன்மையாக கொண்டிருப்பதால் மக்களுக்கான பிரச்சனையை பேசுகின்ற படங்கள் உலகெங்கும் இன்டிபென்டன்ட் படங்களாகவே இருக்கிறது.  அவ்வகையில் இன்டிபென்டென்ட் ஆக படங்களை உருவாக்க, தான் நினைக்கும் கருத்துக்களை உலகத்திற்கு கொண்டு செல்ல தனி ஒரு மனிதனால் முடியும் என்று ஒன் மேன் திரைப்படத்தை எடுத்து  முடித்திருக்கிறேன். 

 

இது கதை உருவாக்கத்தில் தொடங்கி திரைக்கதை, வசனம், மேக்கப் , காஸ்டியூம், கிரேன் ட்ராலி மூவ்மெண்ட், ஒளிப்பதிவு, லைட்டிங், எடிட்டிங் டப்பிங், 3டி மாடலிங், டெக்சரிங், அனிமேஷன், காம்போசிட், கலர் கரெக்ஷன் என  ஒரு திரைப்படத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் யாருடைய உதவியும் இன்றி தனி ஒருவனாக எடுத்து முடித்திருக்கிறேன். 

 

இதற்கான படப்பிடிப்பு இந்தியாவில் தொடங்கி மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், இத்தாலி, வாட்டிகன், மற்றும் அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் நடத்தி முடித்தேன்தனி ஒருவனாக செய்து முடித்ததை தொடக்க முதல் இறுதி வரை மற்றொரு கேமராவில் பதிவு செய்து வைத்திருக்கிறேன்இத்திரைப்படம் உருவான விதத்தையும் அதன் சில காட்சிகளையும் அறிமுக வீடியோவாக வெளியிட்டு இருக்கிறேன்’’என்றார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here