நடிகர் விஷாலுக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கும் ஆகஸ்டு 29-ந்தேதி திருமணம் நடக்க உள்ளது. இதனை சென்னையில் நடந்த யோகிடா பட விழாவில் சாய் தன்ஷிகா அறிவித்தார்.
அவர் பேசும்போது, ‘’நானும் விஷாலும் காதலிப்பதை இனி மறைப்பதற்கு இல்லை. நாங்கள் இருவரும் ஆகஸ்டு 29-ந்தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்து இருக்கிறோம்.
எனக்கு 15 வருடங்களாக விஷாலை தெரியும். பொது இடங்களில் மரியாதையாக நடந்து கொள்வார். எனக்காக பல இடங்களில் குரல் கொடுத்து இருக்கிறார். எந்த ஒரு கதாநாயகனும் எனது வீட்டுக்கு வந்தது இல்லை. பிரச்சினையின்போது எங்கள் வீட்டுக்கு வந்து துணையாக உடன் நின்றார்.
இருவரும் சமீப காலமாக பரஸ்பரமாக பேசி உணர்வை பரிமாறிக்கொண்டோம். அது இருவருக்குமே கல்யாணத்துக்கான தொடக்கமாக இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டோம். எனக்கு அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஐ லவ் யூ’ என்றார்.
பட விழாவில் கலந்து கொண்ட பலரும் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.





















