நடிகராக மாறிய தயாரிப்பாளர் கார்த்திகேசன்

0
87

வித்தியாசமான கதையம்சத்தில் வெளியாகி விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றலாராபடத்தை எம்.கே.பிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் கார்த்திகேசன் தயாரித்து இருந்தார். அந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார். அதில் கார்த்திகேசன் யதார்த்தமாகவும் சிறப்பாகவும் நடித்து இருந்ததாக பலரும் பாராட்டினர். 

மேலும்லாராபடத்தில் கார்த்திகேசனின் இயல்பான நடிப்பை பார்த்து திருமலை புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் தயாராகும்ஒண்டி முனியும் நல்ல பாடனும்என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் வாய்ப்பு அளித்தனர்.  இதிலும் அவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாக பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது. 

இதுகுறித்து தயாரிப்பாளர் கார்த்திகேசன் கூறும்போது, ‘’ஒண்டி முனியும் நல்ல பாடனும்படத்தில் நான் நடித்துள்ள கதாபாத்திரம் எனக்கு நல்லதொரு அடையாளமாக இருக்கும். நல்ல பெயரையும் வாங்கித்தரும்’’ என்றார். 

கார்த்திகேசன் அடுத்து தயாரிக்க இருக்கும் புதிய படமொன்றிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழா ஜூன் மாதம் 14-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்து உள்ளனர். மேலும் சில படங்களில் நடிக்க கார்த்திகேசனுக்கு வாய்ப்புகள் வந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here