சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த நிலையில் சூர்யா அடுத்து ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களை இயக்கி பிரபலமான வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது சூர்யாவுக்கு 46-வது படம் ஆகும். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது.
இதில் நாயகியாக ‘பிரேமலு’ படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜூ நடிக்கிறார். ராதிகா சரத்குமார, ரவீனா தாண்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட், பார்ச்சூர் போர் சினிமாஸ் சார்பில் எஸ்.நாக வம்சி, சாய் செளஜன்யா தயாரிக்கிறார்கள். படத்தொகுப்பு : நவின் நூலி, தயாரிப்பு வடிவமைப்பு : பங்களான், சண்டை பயிற்சி : வி. வெங்கட், நடன இயக்குநர் : விஜய் பின்னி, நிர்வாகத் தயாரிப்பாளர் : யலமஞ்சிலி கோபாலகிருஷ்ணா, லயன் புரொடியூசர் : உமா மகேஸ்வர் ராவ்
சூர்யாவின் 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கியது. இதனை இயக்குனர் திரிவிக்ரம் தொடங்கி வைத்தார். ஶ்ரீகாரா ஸ்டுடியோஸ் வழங்க அடுத்த வருடம் கோடையில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.























