‘மைனா’ உள்ளிட்ட படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தவர் சேது. இவர் தற்போது ‘மையல்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இந்த படம் மே 23-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இது குறித்து நடிகர சேது நெகிழ்ச்சியோடு கூறும்போது, “என்னுடைய சினிமா கரியர் மற்றும் தனிப்பட்ட வாழ்வை மாற்றிய படம் ‘மையல்’. என்னுடைய முழு திறமையை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரத்திற்காக பல வருடங்களாக நான் காத்திருந்திருக்கிறேன். அது ‘மையல்’ படத்தில் நடந்திருக்கிறது.
இந்த வாய்ப்பை அளித்தமைக்காக அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி, ஆர். வேணுகோபால் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுக்கும் இதுபோன்ற தயாரிப்பாளர்களால்தான் தமிழ் சினிமாவுக்கு பெருமை.
தமிழ் இலக்கியத்தில் முத்திரை பதித்திருக்கும் ஜெயமோகன் கதையின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவே பார்க்கிறேன். இயக்குநர் ஏ.பி.ஜி. ஏழுமலை கதையை தாக்கம் ஏற்படுத்தும் வகையில் படமாக்கி இருக்கிறார். நிச்சயம் அனைவரும் விரும்பும் படமாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.
‘மையல்’ படத்தில் நாயகன் சேதுவுடன் நாயகியாக சம்ரிதி தாரா மற்றும பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா, சி.எம். பாலா ஆகியோரும் நடித்துள்ளனர்.
தயாரிப்பு: ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி, தயாரிப்பாளர்கள்: அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஆர். வேணுகோபால், கதை, திரைக்கதை மற்றும் வசனம்: எழுத்தாளர் ஜெயமோகன், இயக்கம்: ஏ.பி.ஜி. ஏழுமலை, இசை: அமர்கீத்.எஸ்,
ஒளிப்பதிவு: பால பழனியப்பன், படத்தொகுப்பு: வெற்றி சண்முகம்.























