நடிப்பு, இசை, இயக்குனராக கலக்கும் கதாநாயகி மேக்னா

0
124

தமிழில்” 13/13 லக்கி நன்என்ற பெயரில் தயாராகி உள்ள படத்தில்  கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா. இந்த படத்துக்கு இசையமைத்து அவரே இயக்கவும் செய்துள்ளார். 

“13/13 லக்கி நன்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள எஸ்வி சேகர், தம்பி ராமையாநட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் தம்பி ராமையா பேசும்போது, ‘’பல வருடங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் ஒரு கதாநாயகி படத்தின் இயக்குனராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக  வருகிறார். அவரை நாம் வரவேற்க வேண்டும்.

திரைப்படத்துறையில் யார் வேண்டுமானாலும் உழைப்பும், திறமையும், அர்ப்பணிப்பும் இருந்தால் ஜெயிக்கலாம்’’ என்றார்.

படத்தின் இயக்குனர் மேக்னா பேசும்போது, ‘’இந்தப்படம் திரில்லர்

படம் , மலேசியாவிலும், தமிழ் நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து இப்போது திரைக்கு வரவிருக்கிறது. இது ஒரு ஹாரர் திரைப்படம். விரைவில் திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது’’என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here