தெலுங்கு திரையுலகில் இருபது வருடங்களுக்கு மேலாக ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனர் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்த தில் ராஜ புதிய திறமையாளர்களை அடையாளம் கண்டு சினிமாவில் அறிமுகப்படுத்தும் நோக்கோடு ‘தில் ராஜூ ட்ரீம்ஸ்’ என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்த உள்ளார்.
இந்த தளம் ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது. இதில் சினிமா துறையில் ஆர்வமாக இருக்கும் இயக்குநர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தலாம்.
நீங்கள் 24 கலைகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலோ அல்லது சினிமாவுக்கு புதியவராக இருந்தாலோ இந்த தளம் உங்கள் திறமைக்கான வாய்ப்பை வழங்கும் என்றும் தடைகளை நீக்கி, பரிந்துரை இல்லாத உண்மையான திறமையாளர்கள் பிரகாசிக்கக்கூடிய நியாயமான தளமாக இது இருக்கும் என்றும் வாய்ப்புகளை ஜனநாயகப்படுத்துவதும், புதிய திறமைகளை மேம்படுத்துவதும், இந்திய சினிமாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதும் இந்த தளத்தின் குறிக்கோள் என்றும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஒரு கதையோ அல்லது திறமையானவராகவோ நீங்கள் இருந்தால், இந்தத் தளத்தில் இப்போதே பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு. உள்ளது.
தில் ராஜு ட்ரீம்ஸ் தளம் அறிமுகத்தை தொடந்து திறமையானவர்களுக்கான களம் திறக்கப்படும். அனைத்து பின்னணியிலிருந்தும் திறமையாளர்கள் தங்கள் ஐடியாக்களை முன்வைக்க இது வாய்ப்பளிக்கிறது.
ஒரு நிபுணர் குழு தளத்தில் வரக்கூடிய உள்ளீடுகளை மதிப்பாய்வு செய்து அதை ஷார்ட் லிஸ்ட் செய்ய, பின்பு தில் ராஜு தனிப்பட்ட முறையில் பட்டியலிடப்பட்ட ஸ்கிரிப்ட்களை மதிப்பீடு செய்வார். ஆண்டுதோறும் நான்கு முதல் ஐந்து படங்களைத் தயாரிப்பதன் மூலம், நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைக் கொடுக்க இந்த தளம் உறுதி ஏற்றுள்ளது.





















