விஜய் டிவியில் வரும் ஞாயிறு முதல் தொடங்கவிருக்கிறது குக்கு வித் கோமாளி சீசன் 6.
இந்த முறை தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜுடன் செஃப் கௌசிக்கும் சேர்ந்துள்ளார்.
வழக்கமான காம்போ போரடித்து விட்டதாக கருதினார்களோ என்னவோ, கோமாளிகளிலும் வழக்கமான புகழ், ராமர் காம்போவுடன் புதிதாக நான்கு பேரை இறக்கி விட்டிருக்கிறார்கள்.
குக்குகளாக வரப்போகிறவர்கள் பட்டியல் என சமூக ஊடகங்களில் பெரிய பட்டியலே உலா வந்தது.
தீபக், நடிகை வடிவுக்கரசி, உள்ளிட்ட பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் சிலரது பெயர்களை சேனலே அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன். பிரியா ராமன், சபானா உள்ளிட்ட இந்தப் பட்டியலில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பெயர்தான் பலருக்கும் பெரிய சர்ப்ரைஸ்.
ரீவைண்ட்
ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவியின் எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தவர் அவர். அவர் நடித்த படங்களின் புரொமோஷன் என்றாலும் கூட அவர் கலந்து கொள்வதை தவிர்த்தே வந்திருக்கிறார்.
விஜய் டிவிக்கும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்குமிடையிலான பிரச்னை சின்னத்திரையில் ஓரளவு தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக அதையும் ஒரு ரீவைண்ட் பார்த்து விடலாம்.
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருக்கும். லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் சேனலில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்கு டிவி ஏரியாவில் பெரிய வரவேற்பு. நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறவர்களிடம் அவர் பேசுகிற போது அடிக்கடி பயன்படுத்திய ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா’ என்கிற வார்த்தை பெரிய அளவில் பிரபலமானது.





















