காமெடி நடிகராக கொடிகட்டிப்பறக்கும் யோகிபாபு மற்றும் வேதிகா, சாந்தினி, இனிகோ பிரபாகர் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘கஜானா’ இதில் பிரதாப் போத்தன், வேலுபிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் டைரக்டு செய்துள்ளார். போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இணை தயாரிப்பு டிக்கிம் சன்ஞ். இந்த படத்தை டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை மே 9-ந்தேதி தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.
படக்குழுவினர் கூறும்போது, ‘’ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் படம் தான் ‘கஜானா’. மொழிகளை கடந்த கதைக்களத்துடன் பான் இந்தியா திரைப்படமாக வியக்க வைக்கும் காட்சிகளுடன் உருவாகியுள்ளது.இண்டியானா ஜோன்ஸ்’, ‘நேஷ்னல் டிரஸ்சர்’ போன்ற சாகச ஹாலிவுட் படங்களுக்கு இணையான, மாயமந்திர காட்சிகள் மற்றும யானை, புலி, பாம்பு போன்ற மிருகங்களின் சாகசக் காட்சிகளோடு மிக பிரமாண்டமான சாகச திரைப்படமாக உருவாகியுள்ள ‘கஜானா’ திரைப்படம் மே 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் இந்த படம் வியப்படைய வைக்கும்’’ என்றனர்.





















