‘காந்தா’ படத்தில் வரும் பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகர தோற்றம் வெளியானது

0
398

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகும்காந்தாதிரைப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சே கதாநாயகியாக நடிக்கிறார். 1950-கள மெட்ராஸின் பரபரப்பான தெருக்களோடு அரங்கு அமைத்துகாந்தாபடமாக்கப்பட்டுள்ளது. செல்வமணி செல்வராஜ் டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தில் வரும் சமுத்திரக்கனியின் வலுவான தோற்றம் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது இதில் நாயகியாக நடிக்கும் பாக்யஶ்ரீ போர்சேவின் தோற்ற போஸ்டரையும படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

வசீகரிக்கும் புன்னகையுடன் கார் ஜன்னலை எட்டிப்பார்த்தபடி அவர் அந்த போஸ்டரில் இருக்கிறார். அவரது வசீகரிக்கும் பார்வை கவித்துவமாக அமைந்துள்ள அவரது முதல் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தை நடிகர் ராணா டகுபதி தலைமையிலான ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.காந்தாபடம் திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here