ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, சம்பத்ராஜ் நடித்த ‘குட்வொய்ப்’ சீரிஸின் டீசரை வெளியிட்ட ஜியோஹாட்ஸ்டார்

0
56

ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் தொடர்குட் வொய்ஃப்’. இந்த தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. 

இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டகுட் வொய்ஃப்என்ற தொடரின் தமிழ் வடிவம் ஆகும். இதில தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி மற்றும் நடிகர் சம்பத் ராஜ் நடித்துள்ளனர். இந்தத் தொடரை நடிகையும் இயக்குநருமான ரேவதி டைரக்டு செய்துள்ளார. இந்த தொடர் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார்

இதே சீரிஸ் இந்தியிலதி டிரையல்பியார், கணூன், தோகாஎன்ற பெயரில், கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது

ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை ரேவதி கூறும்போது, “இந்தி ரீமேக்கில்குட் வொய்ஃப்வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து தமிழில் இதனை இயக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இந்தக் கதையில் கதாநாயகி கதாபாத்திரம் மிகவும் வலுவானது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் தொழில் சார்ந்தும் நிறைய சவால்களை அவர் எதிர்கொள்கிறார். இதனை படமாக்குவதை மிகவும் விரும்பி செய்தேன். பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் போன்ற திறமையான நடிகர்களுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியாவுடன் ஓடிடி உலகில் நான் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சிகரமான அனுபவம்என்றார்

கிருஷ்ணன் குட்டி, ஹெட் ஆஃப் கிளஸ்டர், எண்டர்டெயின்மென்ட் (சவுத்) ஜியோஸ்டார் கூறும்போது, “தமிழ் ரசிகர்களுக்குகுட் வொய்ஃப்சீரிஸை வெளியிட ஆர்வமாக இருக்கிறோம். இதன் இந்தி வெர்ஷனானதி டிரையல்பியார், கணூன், தோகாபார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் அப்படியான வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறோம். உயர்தர தொழில்நுட்பம், என்கேஜிங்கான கண்டெண்ட், ரேவதி போன்ற இயக்குநர், ப்ரியாமணி, சம்பத் ராஜ் போன்ற நடிகர்கள் மற்றும் பனிஜய் ஆசியா ஆகியோருடன் இணைந்து நல்ல படைப்பை பார்வையாளர்களுக்குக் கொடுக்க இருக்கிறோம் என்ற நம்பிக்கை உள்ளதுஎன்றார்

தீபக் தார், (ஃபவுண்டர் & குரூப் சிஇஓ, பானிஜே ஆசியா & எண்டேமோல்ஷைன் இந்தியா) கூறும்போது, ‘’குட் வொய்ஃப்சீரிஸின் இந்தி வெர்ஷனானதி டிரையல்பியார், கணூன், தோகாபார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கதையை தமிழிலும் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறோம். பானிஜே ஆசியா தென்னிந்தியாவை முக்கிய சந்தையாக கருதுகிறது. இங்கு தரமான உள்ளடக்கம் கொடுப்பதற்கும் ஆர்வம் காட்டுகிறது. அதற்கான முதல்படியாககுட் வைஃப்இருக்கும். தரமான கதைகளைத் தொடர்ந்து கொடுத்து வரும் ஜியோஹாட்ஸ்டாருடன் இணைந்திருப்பது மகிழ்ச்சிஎன்றார்

கேட்டி பைக் (இயக்குநர், இண்டர்நேஷனல் ஃபார்மட்ஸ் ஃப்ரம் பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்டிரிபியூஷன்) கூறும்போது, ”உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைகுட் வொய்ஃப்கவர்ந்திருப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் வளர்ந்து வரும் மாறுபட்ட கதைசொல்லல் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு, இந்த வலுவான கதையை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர இருக்கிறோம். ஜியோஹாட்ஸ்டார் மற்றும் பானிஜே ஆசியா ஆகியவை தமிழ் ரசிகர்களுக்காக இந்தக் கதையை எவ்வாறு மறுஉருவாக்கம் செய்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்க நாங்கள் ஆவலாக உள்ளோம்என்றார்.

ஒரிஜினல் யு.எஸ். சீரிஸில் ராபர்ட் மற்றும் மிஷேல் கிங் ஆகியோர் கிரியேட்டர்ஸ் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர்களாகப் பணியாற்றினர். ரிட்லி ஸ்காட், டேவிட் ஜுக்கர் மற்றும் ப்ரூக் கென்னடி ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாகவும் பணியாற்றினர். ’குட் வைஃப்தொடரை சிபிஎஸ் ஸ்டுடியோஸ், ஸ்காட் ஃப்ரீ புரொடக்ஷன்ஸ் மற்றும் கிங் சைஸ் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்தது. பாராமவுண்ட் குளோபல் கன்டென்ட் டிஸ்ட்ரிபியூஷன் இதன் ஃபார்மட் உரிமைகளை பெற்றுள்ளது

ஜியோஹாட்ஸ்டார் இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்று. இது ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் இணைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது. நல்ல கதையம்சம், புதுமையான தொழில்நுட்பம் மற்றும் அர்ப்பணிப்புடன், ஜியோஹாட்ஸ்டார் இந்தியா முழுவதும் உள்ள அனைவருக்கும் பொழுதுபோக்கை மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பானிஜே ஆசியா என்டர்டெயின்மென்ட் மற்றும் தீபக் தார் இடையே கூட்டு முயற்சியாக 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பானிஜே ஆசியா தொடங்கப்பட்டது. இன்று பல்வேறு வகைகளில் பொழுதுபோக்குத் துறையில் மிகப்பெரியதாக பானிஜே ஆசியா உருவெடுத்துள்ளது. 

கடந்த சில ஆண்டுகளில், பானிஜே ஆசியா தி நைட் மேனேஜர், தி டிரையல் (தி குட் வைஃப்), ஹோஸ்டேஜஸ், கால் மை ஏஜென்ட்: பாலிவுட், ஃபால் போன்ற மெகாஹிட் (தழுவல்), தஹான், மத்ஸ்யா காண்ட், உண்டேகி மற்றும் திரிபங்கா போன்ற வெற்றிகரமான அசல் படங்களையும் வழங்கியுள்ளது. மாங்க், ஹவுஸ் அண்ட் சூட்ஸ் ஆகியவை அடுத்து வரவிருக்கிறது. டெம்ப்டேஷன் ஐலேண்ட், தி கபில் சர்மா ஷோ, எம்டிவி ரோடீஸ், தி வாய்ஸ், தி பிக் பிக்சர், இன்டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ், கேஸ் தோ பந்தா ஹை மற்றும் பல போன்ற பிளாக்பஸ்டர்களையும் பானிஜே ஆசியா கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here