டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நரிவேட்டை‘ சுராஜ் வெஞ்சராமூடு, முதன்முதலாக மலையாளத்தில் அறிமுகமாகும் இயக்குனர் சேரன் ஆகியோருடன் பிரியம்வதா கிருஷ்ணன், ஆர்யா சலீம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
உண்மையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
அனுராஜ் மனோகர் இயக்கத்தில், ‘சாகித்ய அகாடமி விருது‘ பெற்ற அபின் ஜோசப் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார்.
இத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கும் விதத்தில் அழுத்தமான கதை மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமான கதைசொல்லலுடன் தரமான நடிப்பை வழங்கும் கலைஞர்களுடன் சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இத்திரைப்படத்தை இந்தியன் சினிமா கம்பெனி சார்பில் திப்பு ஷா, ஷியாஸ் ஹாசன் தயாரித்துள்ளனர். 132 நிமிடம் ஓடக்கூடிய நரிவேட்டை திரைப்படம் அதன் சுருக்கமான படத்தொகுப்பு, இதமான ஒளிப்பதிவு மற்றும் அதிரடியான ஜேக்ஸ் பிஜாய் பின்னணி இசையில் ரசிகர்களை கவர்ந்திழுக்க தயாராக உள்ளது என்றும் படக்குழுவினர் கூறுகிறார்கள்.
இந்த படம் மே 23, 2025-அன்று தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் ஏ.ஜி.எஸ் பட நிறுவனத்தினர் பிரமாண்டமான முறையில் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள்.




















