‘லவ் டுடே’, ‘டிராகன்’ வெற்றிப்படங்களை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘டியூட்’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் ‘பிரேமலு’ மலையாள படத்தில் நடித்து பிரபலமான மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார்.
சரத்குமார், ரோகிணி மொல்லெட்டி. ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் உள்ளிட்ட மேலும் பலர முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.. அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் டைரக்டு செய்கிறார்.
இந்த படத்தின் பிரதீப் ரங்கநாதனின் முதல் பார்வை போஸ்டர் வெளியானதை தொடர்ந்து தற்போது மமிதா பைஜுவின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
டியூட் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய் ரவி சங்கர் தயாரிக்கிறார்கள். பான் இந்தியா படமாக தயாராகி உள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.





















