ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புதிய படம் ‘இம்மார்டல்’. இதில் ‘டிராகன்’ படத்தில் நடித்து பிரபலமான கயாடு லோஹர் நாயகியாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா டைரக்டு செய்கிறார். ஏகே பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிக்கிறார்.
இளைஞன் வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் திடீர சம்பவங்கள் பின்னணியில், அனைவரும் ரசிக்கும் அம்சங்களுடன், கலக்கலான கமர்ஷியல் பேண்டஸி திரில்லர் படமாக உருவாவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். இதன் படப்பிடிப்பு சென்னை, கேரளா முதலான பகுதிகளில் நடந்துள்ளது.
பேண்டஸி ஜானரில் உருவாகும் படம் என்பதால், படத்தில் சிஜி,விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் அதிக அளவில் இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர். படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
‘இம்மார்டல்’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி, இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். வித்தியாசமான இந்த தோற்றம் சினிமா ஆர்வலர்கல் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
ஒளிப்பதிவு – அருண் ராதாகிருஷ்ணன், இசை– சாம் சிஎஸ்
எடிட்டர் – சான் லோகேஷ், கலை இயக்குனர் – சிவசங்கர். ஸ்டண்ட் – சக்தி சரவணன், நடனம் – சபரீஷ்




















