பத்து வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்து வெற்றி பெற்ற ‘தேசிங்குராஜா’ படத்தின் இரண்டாம் பாகத்தை ‘தேசிங்குராஜா-2’ என்ற பெயரில் எழில் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த “துள்ளாத மனமும் துள்ளும்”, அஜித் நடித்த “பூவெல்லாம் உன் வாசம்”, “ராஜா” , சிவகார்த்திக்கேயன் நடித்த “மனம் கொத்திப் பறவை”, பிரபுதேவா, சரத்குமார் நடித்த “பெண்ணின் மனதை தொட்டு”, ஜெயம்ரவி நடித்த “தீபாவளி”, விஷ்ணு விஷால் நடித்த “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” போன்ற பல ஹிட் படங்களை டைரக்ட் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தேசிங்கு ராஜா 2’ படத்தில் விமல் நாயகனாக வருகிறார். ஜனா இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜிதா பொனாடா, ஹர்ஷிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ரவிமரியா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, கிங்க்ஸ்லி, புகழ், மொட்ட ராஜேந்திரன், சாம்ஸ், வையாபுரி, லொள்ளு சபா சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா, விஜய் டிவி வினோத் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பரக்ள் வெவ்வேறு நோக்கங்களுடன் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது. நான்கு நண்பர்களும் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை மையமாக வைத்து உருவாக்கி உள்ளார் டைரகடர் எஸ். எழில். பொதுவாக எழில் படங்களில் காமெடி தூக்கலாக இருக்கும். இந்த படத்தையும் முழு நீள காமெடி படமாகவே உருவாக்கி உள்ளார்.
‘தேசிங்குராஜா-2’ படத்தை இன்பினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். வித்யாசாகர் இசையமைத்துள்ளார். இணை தயாரிப்பு: ஆர்.பாலகுமார், ஒளிப்பதிவு: செல்வா. ஆர், எடிட்டிங்: ஆனந்த் லிங்கா குமார், ஆர்ட்: சிவசங்கர், வசனம்–முருகன், ஸ்டண்ட் : ஸ்டண்ட்: ‘ஃபயர்’ கார்த்திக், நடனம் : தினேஷ், பாடல்கள்: யுகபாரதி, விவேக்,சுப்ரமணியம்





















