முதல் அமைச்சர் விஜய்யுடன் நடிகர் சங்கத்தினர் சந்திப்பு

0
15

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரான ஜோசப் விஜய்யை நடிகர் சங்கத்தினர் சந்தித்தனர். தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாக உறுப்பினர்களான தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ் ஆகியோர் தலைமை செயலகத்துக்கு சென்றனர்.

 

அங்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யை  நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நடிகர் சங்கத்தின் பணிகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தினர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது. இதுகுறித்தும் முதல்வரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here