இயக்குனர் இமயம் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் பாரதிராஜா இன்று (ஜூன் 10-ந்தேதி) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 84. பாரதிராஜா உடலுக்கு முதல் அமைச்சர் விஜய், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பாரதிராஜா உடல் அடக்கம் சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள அல்லி நகரம் பண்ணை வீட்டில் நாளை 11-ந்தேதி நடக்கிறது.
தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஸ்டுடியோவுக்குள் நடந்த சினிமாவை கிராமத்துக்கு அழைத்து சென்று மண்வாசனையுடன் படத்தை கொடுத்தவர். பல வெற்றிப் படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர். பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம். அவரது தந்தை பெயர் பெரிய மாயத்தேவர். தயார் பெயர் மீனாட்சி அம்மாள் என்கிற கருத்தமாள். 1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் தேதி பிறந்தார். இவருக்கு சகோதரிகள் மூவர். சகோதரர்கள் மூவர். பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி.
படிக்கும் போதே நடிக்கும் ஆர்வம் அவருக்கு வந்தது. நாடகங்கள் பார்த்து வளர்ந்தவர், நாடகம் போடும் அளவுக்கு கதை எழுதினர். பாரதிராஜா இயக்கிய ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகங்கள் புதுமையாக இருந்தன. அதன் பிறகு பாரதிராஜா வந்தார். புட்டண்ணா கனகலிடம் ‘இருளும் ஒளியும்’ படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த பாரதிராஜா, அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கிருஷ்ணன் நாயர் இயக்கிய ‘தலைபிரசவம்’ படத்தில் உதவி இயக்குராக பணிபுரிந்தார். அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.
அதன் பிறகு கே.ஆர்.ஜி.யின் அலுவலகத்துக்கு பைனான்சியராக வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘மயிலு’ என்கிற கதையை பாரதிராஜா சொல்லி இருக்கிறார். அந்த கதை எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. அதற்கு ’16 வயதினிலே’ என்று பெயர் வைத்து கமல், ரஜினி, சத்யஜித், ஸ்ரீதேவி, காந்திமதி நடிப்பில் நிவாஸ் ஒளிப்பதிவில் படமாக்க முடிவு செய்தார்.
1977 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியான ’16 வயதினிலே’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து, வசூலி சாதனை படைத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார். மீண்டும் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் தயாரிப்பில் சுதாகர், ராதிகாவை அறிமுகப்படுத்தி ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை இயக்கிய பாரதிராஜா, அடுத்து தனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்ட கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை இயக்கினார். தனது உதவியாளர் கே.பாக்யராஜ் நடிப்பில், தனது தயாரிப்பில் ‘புதிய வார்ப்புகள்’ படத்தை இயக்கிய பாரதிராஜா, இன்னொரு உதவியாளரான கே.விஜயன், சுதாகர், ராதிகா நடிப்பில் ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தை இயக்கினார். இதில் கே.விஜயனுக்கு அவரே டப்பிங் பேசி இருந்தார். அடுத்து ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அவரே கதாநாயகனாக அறிமுகமானார். அவரது படங்களின் ஒளிப்பதிவார் நிவாஸ் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் அருணா, விஜயசாந்தி இருவரையும் கதாநாயகிகளாக அறிமுகம் செய்தார்.
தனது உதவியாளர் மணிவண்ணன் சொன்ன கதையில் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்கிற படத்தை தனது நண்பனும், இளையராஜாவின் சகோதரருமான பாஸ்கர் தயாரிப்பில் இயக்கினார். அந்தப் படத்தில் கார்த்திக் நாயகனாகவும், ராதா கதாநாயகியாகவும், தியாகராஜன் வில்லனாகவும் அறிமுகமானார்கள். இந்தப் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றார். மேலும், டிக்டிக்டிக், காதல் ஓவியம், வாலிபமே வாவா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ்செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ் படங்களையும், சீதாகொகா சிலுகா, யுவதாரம் புலிச்சின்டி, ஈதரம் இல்லலு, ஜமடகனி, ஆராதனா ஆகிய தெலுங்கு படங்களையும், சொல்வ சவான், லவவர்ஸ், சாவேரே வலி காடி ஆகிய இந்திப் படங்கள் என சுமார் 44 படங்களை இயக்கியுள்ளார்.
16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், டிக்டிக்டிக், என்னுயிர் தோழன், கடல் பூக்கள், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ் படங்கள், கொத்த ஜீவித்தலு தெலுங்கு படம், சொல்வ சவான், ரெட் ரோஸ் ஆகிய இந்திப் படங்கள் என 12 படங்களுக்கு கதை எழுதியவர், கே.பாக்யராஜ், மணிவண்ணன், கலைமணி, ‘அன்னக்கிளி’ செல்வராஜ், பஞ்சு அருணாசலம், வேதம் புதிது கண்ணன் ஆகியோரின் கதைகளிலும் படம் இயக்கி இருக்கிறார்.
கல்லுக்குள் ஈரம் படத்தில் நடிகராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பிறகு நிழல்கள், தாவணி கனவுகள், இதயம், தந்துவிட்டேன் என்னை, காதல் வைரஸ், ஆயுத எழுத்து, ரெட்டை சுழி, பாண்டியநாடு, நினைத்தது யாரோ, குரங்கு பொம்மை, படை வீரன், சீதக்காதி, கென்னடி கிளப், நம்ம வீட்டுப் பிள்ளை, மீண்டும் ஒரு மரியாதை, ஈஸ்வரன், ராக்கி, மாநாடு, திருச்சிற்றம்பலம் ஆகிய இருபது படங்களில் நடித்திருக்கிறார்.
கே.பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, அருணா, விஜயசாந்தி, உஷா, கவுண்டமணி, கார்த்திக், ராதா, தியாகராஜன், ரேவதி உள்ளிட்ட பலரை திரையுலகில் அறிமுகம் செய்தவர், மகன் மனோஜ் கே.பாரதியை ‘தாஜ்மஹால்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அந்தப் படத்தை இயக்கி தயாரித்தவர், ‘அல்லி அர்ஜுனா’ படத்தையும் மகனுக்காக தயாரித்தார்.
இவரது ‘முதல் மரியாதை’ படம் 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த படத்துக்கான தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ள வைத்தார். பாரதிராஜா தனது சகோதரியின் மகள் சந்திர லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பாரதிராஜா – சந்திர லீலா தம்பதிக்கு மனோஜ் என்கிற மகனும், ஜனனி என்கிற மகளும் பிறந்தனர். மலேசியாவை சேர்ந்த ராஜகுமார் தம்பிராஜாவுக்கு மகள் ஜனனியை திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகன் மனோஜ் தாஜ்மகால் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து 15க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தவர் சென்ற ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இவரது காதல் மனைவி நடிகை நந்தனா. சக்ஸஸ் உட்பட 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவர்களுக்கு ஆர்த்திகா, மதிவதனி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
விருதுகளும் கௌரவிப்பும் 2004 – பத்மஸ்ரீ இந்திய அரசிடமிருந்து தேசிய திரைப்பட விருதுகள்
1982 – சிறந்த தெலுங்குத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது- சீதாகொகா சிலுகா (இயக்குநர்)
1986 – தேசிய திரைப்பட சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது- முதல் மரியாதை (தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்) 1988 – பிற சமூக பிரச்சினைகள் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது- வேதம் புதிது (இயக்குநர்) 1995 – கருத்தம்மாவுக்கு (இயக்குநர்) குடும்ப நலன் குறித்த சிறந்த படத்திற்கான தேசிய திரைப்பட விருது 1996 – சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய திரைப்பட விருது- அந்திமந்தாமரை (இயக்குநர்) 2001 – தேசிய சிறந்த திரைக்கதைக்கான திரைப்பட விருது- கடல் பூக்கள் பிலிம்பேர் விருதுகள் தெற்கு 1978 – சிறந்த தமிழ் இயக்குநர்- சிகப்பு ரோஜாக்கள் 1987 – சிறந்த தமிழ்த் திரைப்படம்- வேதம் புதிது 1987 – சிறந்த தமிழ் இயக்குநர்- வேதம் புதிது
1994 – சிறந்த தமிழ்த் திரைப்படம்- கருத்தம்மா தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
1977 – சிறந்த இயக்குநர் விருது- 16 வயதினிலே 1979- சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது – இரண்டாம் பரிசு – புதிய வார்ப்புகள் 1981 – சிறந்த இயக்குநர் விருது- அலைகள் ஓய்வதில்லை
1994 – நல்ல வெளிச்சத்தில் பெண்ணை சித்தரிக்கும் சிறந்த படம்- கருத்தம்மா
2001 – தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ விருது – 2001 இல் அறிஞர் அண்ணா விருது
2003 – முதல் இடத்தில் சிறந்த படம்- ஈர நிலம் நந்தி விருதுகள்
1981 – சிறந்த இயக்குநர் நந்தி விருது- சீதாகொகா சிலுகா
தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்
1977 – சிறந்த இயக்குநர் விருது- 16 வயதினிலே
1979- சிறந்த படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது – இரண்டாம் பரிசு – புதிய வார்ப்புகள்
1981 – சிறந்த இயக்குநர் விருது- அலைகள் ஓய்வதில்லை
1994 – நல்ல வெளிச்சத்தில் பெண்ணை சித்தரிக்கும் சிறந்த படம்- கருத்தம்மா
2001 – தமிழ்நாடு மாநில திரைப்பட கௌரவ விருது – 2001 இல் அறிஞர் அண்ணா விருது
2003 – முதல் இடத்தில் சிறந்த படம்- ஈர நிலம்




















