நடிகை பிரியங்கா மோகன் மற்றும் நெட்ஃபிலிக்ஸின் ’மேட் இன் கொரியா’ குழுவினர் எம்சிசி கல்லூரி மாணவர்களுடன் கொரியன் வார்த்தை விளையாட்டை (Korean Word Game) கலகலப்பாக விளையாடினர்!*
இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில், ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள ‘மேட் இன் கொரியா’ படக்குழுவினர் இன்று சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்களை சந்தித்து படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.
படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் கொரிய மொழி வார்த்தை விளையாட்டு மற்றும் ’திஸ் ஆர் தட்’ (This or That) போன்ற ஃபன் விளையாட்டுகள் விளையாடி மாணவர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினர்.
ரா. கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகிறது.
நடிகர்கள்:பிரியங்கா மோகன், பார்க் ஹை–ஜின் தொழில்நுட்பக்குழு விவரம்:எழுத்து, இயக்கம்: ரா.கார்த்திக், தயாரிப்பாளர்: ஸ்ரீநிதி சாகர், தயாரிப்பு: ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்
*நெட்ஃபிலிக்ஸ் பற்றி:*நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.






















