‘தி வெர்டிக்ட்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கொலை மற்றும் அதை துப்பறியும் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கி உள்ளார். அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா ஏற்கனவே இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சரத்குமாரும் பர்ஸ்ட் சிங்கிளை மதன் கார்க்கியும வெளியிட்டிருந்தனர். படத்தின் டீசரை குஷ்பூ வெளியிட்டு இருந்தார். இந்த மூன்றும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது . படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது.
இந்த நிலையில் இன்று (9-ந்தேதி) இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் அதில் “திருடா” என்ற பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தொடங்கி வைப்பார் என்றும அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான போர்ப் பதற்றம் காரணமாக செகண்ட் சிங்கிள் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு மே மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.




















