தமிழக முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ள ஜோசப் விஜய்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘’தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வரலாற்றில் இன்று ஒரு புது அத்தியாயம்.. கிரீடத்தில் இன்னுமொரு வைரம் மக்கள் திலகம் எம்ஜிஆர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், செல்வி ஜெ ஜெயலலிதா, அவர்களைத் தொடர்ந்து நான்காம் உறுப்பினராக திரு. ஜோசப் விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டதில் தென்னிந்திய நடிகர் சங்கம் அளவிலா மகிழ்வும் பெருமிதமும் கொள்கிறது
எடுத்துக்கொண்ட பொறுப்பினை நிறைவுற புகழ்பெற தென்னிந்திய நடிகர் சங்கம் இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.




















