விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்துக்கு ‘லாயர்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதன் டைட்டில் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். ‘லாயர்’ படத்தை ‘ஜென்டில்வுமன்’ படத்தை இயக்கி பிரபலமான ஜோஷ்வா சேதுராமன் டைரக்டு செய்கிறார்.
படத்தில் விஜய் ஆண்டனிக்கு இணையான எதிர் கதாபாத்திரத்தில் இந்திய அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகையும் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. லாயர் படம் நீதிமன்ற பின்னணியில் வித்தியாசமான வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது என்றும் இதுவரை திரையில் பார்த்திராத நீதிமன்றத்தையும் அதன் நடைமுறைகளையும் தத்ரூபமாக திரையில் பிரதிபலிக்கும் படமாக இது இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இதில் நடிக்கும் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.





















