மேடை கலைஞராக கலை பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர் தொலைக்காட்சி, திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். தற்போது ‘அம்பி’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாகவும் அறிமுகமாகி உள்ளார்.
இதில் நாயகியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். ரமேஷ் கன்னா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயனா, மீசை மகாதேவன், சேரன் ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.
டி2 மீடியா பட நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்துள்ளார். இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாஸர் ஜே.எல்வின் டைரக்டு செய்துள்ளார். வெற்றிவேல் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.பி.முரளிதரன் இசையமைத்துள்ளார். நா.ராசா பாடல் வரிகளை எம்.எம்.கிரவாணி, சைந்தவி, சத்யபிரகாஷ், டிரம்ஸ் சிவமணி, தேவகோட்டை அபிராமி ஆகியோர் பாடி உள்ளனர்.
முழுக்க குடும்ப காமெடி படமாக உருவாகி உள்ளது. படம் திரைக்கு வர தயாராகிறது. இந்த படத்தின் முதல் தோற்ற போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















