விஜய்-ஆண்டனி, இயக்குனர் சசி-மீண்டும் இணையும் ‘பிச்சைக்காரன்’ கூட்டணி

0
45

வெற்றி பெற்றபிச்சைக்காரன்படத்தை தொடர்ந்து இயக்குனர் சசி, நடிகர் விஜய் ஆண்டனி ஆகியோர் புதிய படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இரட்டை நாயகர்கள் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியும அவரது தங்கை மகன் அஜய் திஷானும் நாயகர்களாக நடிக்கிறார்கள். 

தமிழ்நாட்டின் வட மாவட்டத்தில் நடந்த உணர்ச்சிப்பூர்வமான உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.. சசி இயக்கத்தில் தனது தங்கை மகன் அஜய் திஷான் அறிமுகமாவது குறித்து விஜய் ஆண்டனி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதில்லப்பர் பந்து’, ‘மாமன்படங்களில் நடித்துள்ள சுவாசிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தை சசி இயக்கியசிவப்பு மஞ்சள் பச்சைவெற்றிப் படத்தை தயாரித்த அபிஷேக் பிலிம்ஸ் இரமேஷ் பி. பிள்ளை தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. பாலாஜி ஶ்ரீராம் இசையமைக்கிறார், ஒளிப்பதிவு: தர்ஷன் கிர்லோஷ், படத்தொகுப்பு: ஜிபி பங்கஜாக்ஷன், கலை: ஏழுமலை ஆதிகேசவன். அனைத்து பாடல்களையும் மோகன் ராஜா எழுதுகிறார். மேலும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here