ஆஸ்திரேலிய பாக்ஸிங் சாம்பியனிடம் பயிற்சி பெற்ற நடிகர் மஹத் ராகவேந்திரா

0
75

மங்காத்தாபடம் மூலம் திரையுலகில் அறிமுகமான மஹத் ராகவேந்திரா த்மிழ் தெலுங்கில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்தமிழில்ஜில்லா’, ’டபுள் எக்ஸ்எல்மற்றும்பேக்பெஞ்ச் ஸ்டூடண்ட்ஆகிய படங்களிலும் தனது நடிப்பு மூலம் முத்திரை பதித்தார். பிக் பாஸ் தமிழ் சீசன் 2 இல் இறுதிப் போட்டியாளராகவும் வந்தார். 

 தற்போது பாக்ஸிங்கிலும் பயிற்சி பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடமாக இந்தியாவில் பாக்ஸிங்கில் நடிகர் மஹத் கடுமையான பயிற்சி பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் பயிற்சி பெற்றார்அதாவது ஆஸ்திரேலிய சூப்பர் வெல்டர்வெயிட் குத்துச்சண்டை சாம்பியனான கோயன் மசூடியரிடம் பயிற்சி பெற்று இருக்கிறார்.  

இந்த அனுபவம் குறித்து மஹத் ராகவேந்திரா கூறும்போது, “சக்தி, வேகம், கவனம், சமநிலை மற்றும் திறமை ஆகியவற்றின் நம்ப முடியாத பயணம். இதில் பல சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்து பயிற்சி பெற்றேன். இது ஃபிட்னஸ் தொடர்புடையது மட்டுமல்ல, ஒரு போராளியின் மனநிலையையும் எனக்குள் உருவாக்கியது. 

கோயனிடம் பயிற்சி பெற்றது சிறந்த அனுபவம். பாக்ஸிங் அரங்கமோ அல்லது கேமராவுக்கு முன்பு என்றாலுமே சரி வெற்றிபெற தேவையான கவனம், உத்தி மற்றும் மன ஒருமைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை எனக்கு அளித்தது இந்தப் புதிய அத்தியாயத்தின் மூலம் தனிப்பட்ட வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு, உடல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் என்னை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும் 

நடிகர்கள் தங்களுக்கான ஸ்டிரீயோ டைப்பை உடைக்க வேண்டும் என்பதை கார் ரேஸ் சாதனைகள் மூலம் எனக்கு அஜித் அண்ணாதான் புரிய வைத்தார். நான் விரும்பும் போட்டி விளையாட்டுகளில் பங்கேற்கவும், என் திறமையை நிரூபிக்கவும் இனிவரும் காலங்களில் விரும்புகிறேன். அடுத்தடுத்து எனது படங்களிலும் திறமையை மேம்படுத்த இது உதவும்என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here