‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளத. இந்த படத்தை சூப்பர் ஸ்டார் பிலிம்ஸ் சார்பில் சமீர் அலிகான் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார. இவர் ஏற்கனவே ‘காதல் மட்டும் வேணா’ என்ற படத்தை இயக்கி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்தில் மான்சி, ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், உதயதீப், மாலா பார்வதி, தீபிகா அமின், கும்கி அஸ்வின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படம் பற்றி சமீர் அலிகான் கூறும்போது, ‘’இத்திரைப்படம் ஒரு கலகலப்பான காதல் கதை ஆகும். அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. திருச்சூரில் பிறந்து கோயம்புத்தூரில் வளர்ந்த நான் விஸ்காம் பட்டம் பெற்ற பின்பு ‘காதல் மட்டும் வேணா‘ திரைப்படத்தை இயக்கி நடித்தேன். தற்போது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு‘ படத்தை தயாரித்து இயக்குவதோடு முதன்மை வேடத்திலும் நடிக்கிறேன்.
இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் கூறியிருக்கிறோம்,” என்றார்.
‘தமிழ் பையன் இந்தி பொண்ணு‘ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று நிறைவு பெற்றுள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட சமீர் அலி கான் திட்டமிட்டுள்ளார்





















