கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் கடந்த மே 1 ஆம் தேதி திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரூ.104 கோடி வசூலைக் கடந்துள்ளத. ரெட்ரோ படத்தின் லாபத்தில் ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு சூர்யா வழங்கியுள்ளார்.
ரெட்ரோ படம் திரையரங்குகளை திருவிழாகோலம் ஆக்கியதோடு, விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் பாரட்டுக்களை குவித்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட படக்குழுவினர், பத்திரிக்கை ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்து, நன்றி தெரிவித்தனர். வெற்றியை கேக் வெட்டியும் கொண்டாடினர்.
‘ரெட்ரோ’ படத்தில் சூர்யாவுடன பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா – சூர்யா ஆகியோருடன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
இப்படம் உலகமெங்கும் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.




















