கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு நடிகர் மன்சூர் அலிகான் ரூ.1 லட்சம் பரிசு

0
24

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த கபடி வீராங்கனை கார்த்திகா தங்க பதக்கம் வென்றார். கார்த்திகாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  கார்த்திகாவை முதல் அமைச்சர் மு..ஸ்டாலின் நேரில் அழைத்த ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார்.  

 

இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் கபடி வீராங்கனை கார்த்திகாவை நேரில் சந்தித்து பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் கார்த்திகாவுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் பரிசாக  வழங்கினார். ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகா திருமணத்திற்கு 100 பவுன் நகை போடுவதாகவும்  மன்சூர் அலிகான் அறிவித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here