நடிகர் சிவசூரியன் நினைவு நாளில் அன்னதான நிகழ்ச்சி— அன்பகம் கலை, ஆஸ்டின், பூச்சி முருகன் தொடங்கி வைத்தனர்

0
63

தமிழ் திரைப்பட உலகில் நூற்றுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களின் தந்தையுமான காலம் சென்ற கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு,

கலைமாமணி எஸ். எஸ்.சிவசூரியன் அவர்களின் பேரனும் வழக்கறிஞருமான எஸ்.எம்.சிவசூரியன் ஏற்பாட்டில், தொடர் அன்னதானம் வழங்கும் நிகழ்வுகள் தி.நகர், தர்மாபுரம் மற்றும் ராமகாமத்புரம் பகுதிகளில் நடைபெற்றது. 

இந்த அன்னதான நிகழ்ச்சிகளை திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின், தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ் முருகன் ஆகியோர் தொடக்கி வைத்து சிறப்பித்தனர்.

 இலக்கிய அணி இணைச் செயலாளர் ஈரோடு இறைவன், சென்னை வடகிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்டி.மதன் குமார், தி.நகர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஏழுமலை, வட்டச் செயலாளர்கள் தேவராஜ், தவமணி, விஷ்ணு, வெங்கடேசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here