‘தி வெர்டிக்ட்’ பட முன்னோட்டம்–நடிகை சுஹாசினியை பாராட்டிய பார்த்திபன்

0
86

கொலை மற்றும் கொலை சார்ந்த புலனாய்வு கதையம்சத்தில் உருவாகி உள்ள படம்தி வெர்டிக்ட்இதில்  வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கி உள்ளார். அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ், என்.கோபி கிருஷ்ணா தயாரித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு: அரவிந்த் கிருஷ்ணா 

தி வெர்டிக்ட் படத்தின் முன்னோட்டம் வெளியீடு சென்னை பிரசாத் லெப் திரையரங்கில் நடந்தது.

நிகழ்ச்சியில் நடிகர பார்த்திபன் பேசும்போது, ‘’வெர்டிக்ட்என்ற தலைப்பில் படத்தைத் தேடிய போது ஒரு ஆங்கிலப் படம் 1982-ல் வந்ததைப் பார்த்தேன் . இரண்டும் ஒரே மாதிரி தான் இருந்தது. கதையைச் சொல்லவில்லை. திரைப்பட உருவாக்கத்தில் அவ்வளவு தரமாக இரண்டும் ஒன்று போல் இருந்தது என்று சொல்கிறேன்.

எனதுஇரவின் நிழல்படத்தில் வரலட்சுமி நடித்த போது எனக்கு பதற்றமாக இருந்தது. ஒரே ஷாட்டில் 2 மணி நேரத்தில் எடுக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் முதலில் இருந்து எடுக்க வேண்டும்ஆனால் அதில் வரலட்சுமி சரியாகச் செய்து  பிரமாதமாக நடித்திருந்தார். 

 இங்கே சுஹாசினியை பார்க்கும்போது, அவரது  அழகின் திமிர் தெரிந்தது. அந்தத் திமிர் அவருக்கு அதிகம். எனக்கு 50 வயது என்று அவர்  சொன்ன போது அந்தத் திமிர் தெரிந்தது. 28 வயதுக்கு மேல் பெண்கள் வயதை மறந்து விட்டால் திமிர் போல் ஒரு அழகு இருக்கும். அது பேரழகு. எனக்கு மணிரத்னம் மீது காதல் ,மணிரத்தினத்திற்கு சுஹாசினி மீது காதல்.

ஆறு பெண்கள் நடித்த ஒரு ரஷ்யப் படத்தைப் பார்த்தேன். அதேபோல் இது ஐந்து பெண்கள் திறமை காட்டியுள்ளார்கள்என்ற போது , சுஹாசினி குறிப்பிட்டு தனக்கு 63 வயது என்றார்.

ஒரு பெண்ணின் அழகு 30 வயதுக்கு மேல் அறிவாக மாறும் போது அழகு. அழகை 30 வயதுக்கு மேல் அறிவாக மாற்றலாம், அந்த அறிவையே அமைதியாக மாற்றலாம். அறிவாக மாறியதற்கு சுஹாசினி உதாரணம். அமைதியாக மாற்றியதற்கு அன்னை தெரசா உதாரணம். இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்என்றார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் நடிகர் பிரகாஷ் மோகன் தாஸ் எழுதியலங்காஎன்கிற நூலை  வெளியிட நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here