தமிழக விவசாயிகளுக்கு த.வெ.க ஆட்சி முழுமையாக கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்— தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் ச.சக்திவேல் வேண்டுகோள்.

0
10

மகராஷ்டிராவை பார்த்த பின்னராவது, தமிழக விவசாயிகளுக்கு முழுமையாக கடன் தள்ளுபடி செய்திட த.வெ.க ஆட்சி முன்வரவெண்டும் வேண்டும் என்று  தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் ச.சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

‘’விவசாயம் என்பது நாட்டின் முதுகெலும்பாகும். இயற்கை பேரிடர்கள், வறட்சி, வெள்ளம், விளைபொருட்களின் விலை வீழ்ச்சி மற்றும் அதிகரித்து  வரும் உற்பத்திச் செலவுகள் காரணமாக பல விவசாயிகள் தமிழ்நாட்டில் கடன் சுமையில் சிக்கியுள்ளனர். இதனால், சிறு குறு விவசாயிகள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு விவசாயிகளும் பாதிப்பு அடைந்து இருக்கின்றார்கள். எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயக் கடன்களை முழுமையாக அனைத்தும் விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்வது அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும். இது அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதோடு, மீண்டும் விவசாயத்தில் முதலீடு செய்யும் நம்பிக்கையையும் உருவாக்கும்.

 

இதனையொட்டியே, தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முழுமையாக எல்லா விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்வதாக உறுதி அளித்தது என நம்புகிறோம். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் தமிழக அரசு சிறு குறு விவசாயிகளுக்கு மட்டும் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி எனவும் அதற்கு மேற்பட்ட கடன்கள் குறைந்த அளவிலேயே தள்ளுபடி எனவும் பிற விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை என்று அறிவித்திருப்பது வேதனை அளிக்கிறது.  தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் கொதித்து எழுந்து முழுமையான விவசாய கடன் தள்ளுபடிக்காக போராடுகிறார்கள். இருப்பினும் தமிழக அரசு இது வரை விவசாயிகளின் கோரிக்கைகளை செவி சாய்க்காமல் நிதி பற்றாக்குறையை காரணமாக கூறுகிறது. இது விவசாயிகளை நம்ப வைத்த ஏமாற்றிய செயலாகும். விவசாயிகளின் துயரத்தை உணர்ந்து தமிழக அரசு அரசு உடனடியாக முன் வர வேண்டும்.

 

நிதி பற்றாக்குறை, இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு என்று கூறுவதை விட்டு விட்டு எப்படி மகாராஷ்டிராவில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசு பார்த்திட வேண்டும். அதே அடிப்படையில் தமிழக விவசாயிகளுக்கு தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு விவசாயிகளுக்கு பயிர்கடன் முழுமையாக ரத்து செய்திட தமிழக அரசு முன்வரவெண்டும் என தமிழக முற்போக்கு மக்கள் கட்சி வலியுறுத்துகிறது’’

இவ்வாறு அறிக்கையில்  தமிழக முற்போக்கு மக்கள் கட்சி தலைவர் ச.சக்திவேல் தெரிவித்து உள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here