விஜய் நடித்த சிவகாசி, திருப்பாச்சி, அழகிய தமிழ் மகன், காவலன், வேலாயுதம் போன்ற படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர் மரியாதை நிமித்தமாக முதல் அமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்தார். அப்போது முதலவர் விஜய்க்கு எம்.எஸ்.பாஸ்கர் வாழ்த்து தெரிவித்தார்.
உங்கள் சிறப்பான சேவைக்கும், மக்களின் நலன் காக்கும் பணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று எம்.எஸ்.பாஸ்கர் தெரிவித்த போது முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார். முதல்வர் விஜய் எம்.எஸ்.பாஸ்கருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். நலம் விசாரிப்புகளுடன் அவருடன் நடித்த படங்களைப் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பார்க்கிங் படத்தில் அவரது நடிப்பு மிக சிறப்பாக இருந்தது என்று பாராட்டியதோடு தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் எம்.எஸ்.பாஸ்கர் அவர்களின் துணைவியார் திருமதி.ஷீலா பாஸ்கர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களிடமும் பேசியிருக்கிறார். உச்ச நட்சத்திரமாக படப்பிடிப்பில் இருந்த போது எப்படி அன்பையும், மரியாதையும் காட்டினாரோ அதே அன்பையும் மரியாதையும் இப்போதும் மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் காட்டியதை கண்டு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ந்திருக்கிறார்.





















