பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘மூன்வாக்’. இதில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை மனோஜ் என்.எஸ் டைர்கடு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். 25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபுதேவாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் மூன்வாக் படத்தில் இணைந்துள்ளனர்.
இசை, நடனம், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை மையமாகக் அனைத்து வயதினரையும் மகிழ்விக்கும் குடும்பப் பொழுதுபோக்குடன் பான் இந்தியா படமாக உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது படப்பிடிப்பும், எடிட்டிங்கும் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் நடந்து வருகிறது. மூன்வாக் படத்தின் உலகளாவிய திரையரங்க விநியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி உள்ளது.
இதுகுறித்து ரோமியோ பிக்ஸர்ஸ் ராகுல் கூறும்போது, ‘’25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மானும், பிரபுதேவாவும் ஒன்றாக இணையும் மூன்வாக் படத்தை வெளியிடுவது பெருமையாக உள்ளது. இயக்குநர் மனோஜ் என்.எஸ்வுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி. குடும்பம் முழுவதையும் மகிழ்விக்கும், இசை, நடனம் மற்றும் நகைச்சுவையால் நிரம்பிய படமாக உருவாகியுள்ளது” என்றார்.
ஒளிப்பதிவு: அனூப் வி. ஷைலஜா, எடிட்டிங்: ரேமண்ட் டெரிக் கிராஸ்டா, நடனம்: சேகர். இந்த படத்தை திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் இயக்குநர் மனோஜ் என்.எஸ்வுடன் சேர்ந்து தயாரித்துள்ளனர்.





















