‘மையல்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சேது கதாநாயகனாகவும் சம்ரிதி தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா மற்றும் சி.எம். பாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஏபிஜி. ஏழுமலை இயக்கி உள்ளார். மையல் படம் மே 23-ந்தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
இந்த படம் குறித்து இயக்குனர் ஏபிஜி.ஏழுமலை கூறும்போது, ’காதல், துரோகம் மற்றும் சமூக போராட்ட விஷயங்களை பேசும் உணர்வுப்பூர்வமான படமாக ‘மையல்’ படம் இருக்கும்.
இந்த படத்தின் கதையோடு பார்வையாளர்கள் தங்களை நிச்சயம் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் வலுவான கதையை கொடுத்த ஜெயமோகனுக்கு நன்றி. அவரது வலுவான எழுத்துக்களும் தெளிவான கதாபாத்திரங்களின் குணாதிசயங்களும் எனக்கு சரியான நடிகர்களை தேர்வு செய்ய உதவியது.
நாயகன் சேது நாயகி சம்ரிதி தாரா ஆகியோரும் மற்ற நடிகர் நடிகைகளும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். தொழில் நுட்ப குழுவினர் படத்துக்கு பெரிய பலமாக இருக்கிறார்கள். என்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு நன்றி. மையல் படம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்’’ என்றார்.
இந்த படத்தை ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி சார்பில் அனுபமா விக்ரம் சிங் மற்றும் ஆர். வேணுகோபால் தயாரித்துள்ளனர். இசை;அமர்கீத். எஸ், ஒளிப்பதிவு: பால பழனியப்பன், படத்தொகுப்பு: வெற்றி சண்முகம். மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்






















