‘சிந்து பைரவி’ சீரியல் பிரச்னை தொடர்பாக நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்டு தரப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வருடத்துக்கு அவர் எந்தவொரு டிவியிலும் சீரியலிலோ அல்லது ரியாலிட்டி ஷோவிலோ தலைகாட்ட முடியாது என்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாகத் தொடங்கிய ‘சிந்து பைரவி’ தொடர் இரண்டு தோழிகளின் கதை. அதில் சிந்துவாக ஒரு நடிகையும், ‘பைரவி’யாக ரவீனாவும் கமிட் ஆனார்களாம்.
ஆனால் விஜய் டிவியில் சில சீரியல்கள் மற்றும் ‘குக்கு வித் கோமாளி’, ‘பிக் பாஸ்’ ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் ரொம்பவே பாப்புலர் ஆகியிருந்த ரவீனாவோ ப்ரொமோ ஷூட்டெல்லாம் முடிந்த நிலையில் தொடரில் நடிக்க மறுத்து விட்டார்.
‘ஹீரோயின்’ எனச் சொல்லி கமிட் செய்தார்கள் என்றும் ஷூட்டிங் போன பிறகே அது இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் எனத் தெரிய வந்ததாகவும் ரவீனா தரப்பில் கூறினார்கள்.
எனவே, ஒளிபரப்பு தொடங்குவதற்குச் சில நாட்கள் முன் இந்த சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் ரவீனா.
இதனால் கோபமடைந்த தயாரிப்பு தரப்பு சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்ய, அவர்கள் ரவீனாவுக்கு ரெட் கார்டு எனச் சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.
அந்தச் சமயத்தில் நாம் ரவீனாவிடம் பேசியிருந்தோம்.
”என் மீது புகார் கொடுக்கப்பட்டது நிஜம்தான். ஆனா ரெட் கார்டெல்லாம் எனக்கு வழங்கப்படல. அதோட, இப்ப இந்த விவகாரம் சுமுகமாக முடிஞ்சிடுச்சு.





















