தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படும் தவத்திரு ஶ்ரீலஶ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளின் 103வது நினைவு தினத்தையொட்டி, இன்று (13.11.25) தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் நடிகை லதா சேதுபதி, ஹேமச்சந்திரன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்
நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர்கள் லலிதா குமாரி, எம்.ஆர்.எம்.பாலசுப்பிரமணியம், பழ.காந்தி, தாசரதி, அனந்த நாராயணன், நடிகர் சங்க மேலாளர் தாமராஜ் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.





















