நடிகர் ஹம்சவிர்தன், ‘புன்னகை தேசம்‘, ‘ஜூனியர் சீனியர்‘, ‘மந்திரன்‘, ‘பிறகு‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது அவர் தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக் கொண்டு இருக்கிறார்.
லியோ ஹம்சவிர்தனுக்கும் கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவுக்கும் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் லியோ ஹம்சவிர்தன்–நிமிஷா திருமணம் புதுச்சேரியில் சமீபத்தில் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்தது. நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் திருமண வரவேற்பு நிக்ழ்ச்சி நடந்தது. இதில் இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
லியோ ஹம்சவிர்தனின் முதல் மனைவி சாந்தி 2021-ல் கொரோனா நோய் தொற்றில் இறந்தார் என்பது குறப்பிடத்தக்கது. தற்போது அந்த சோகத்தில் இருந்து மீண்டு தனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறார்.
லியோ ஹம்சவிர்தன் இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த திரைப்படங்களுக்கான தயாரிப்புக்கு முந்தைய பணிகள் தற்போது நடந்து வருகின்றன






















