‘ஒரு அடார் லவ்‘ படத்தில் நடித்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றவர் பிரியா பிரகாஷ் வாரியர். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார். சமீபத்தில் திரைக்கு வந்த அஜித்குமாரின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அர்ஜூன் தாஸுடன் நடித்த பிரியா வாரியர் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
இந்த நிலையில் சினிமாவில் தனத வளர்ச்சி, ஆக்டிங் ஸ்டைல் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றி பிரியா வாரியர் அளித்துள்ள பேட்டியில் கூறும்போது, ‘’குட்பேட் அக்லி படத்தில் அஜித்குமார் மற்றும் அர்ஜூன் தாஸுடன் நடித்த அனுவம் இரட்டி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக ரசிகர்கள் அளித்த அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொடர்ந்து இதுபோன்ற வலிமையான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக ‘குட் பேட் அக்லி‘ படத்தில் எனது நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்தது நெகிழ்ச்சியான அனுபவம். அவரோடு நடித்ததன் மூலம் எனது கனவு நிறைவேறியது. அஜித்குமாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்த படத்தில் நடிகை சிம்ரனின் ‘சுல்தானா’ பாடலை ரீகிரியேட் செய்து நடனம் ஆடியது இன்னொரு மைல் கல்லாக அமைந்தது. சிம்ரன் நடனத்துடன் ஒப்பிடும் என்னுடைய நடனத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என அர்ஜூன் தாஸிடம் தெரிவித்தேன். எல்லோரும் எனக்கு ஊக்கம் அளித்தனர்.
அடுத்தடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குனர் மணி ரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் என்னுடைய கரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எனது நடிப்பில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.




















